ட்ரம்ப் தம்பதியினர்! மைத்திரிக்கு அளித்த உற்சாக வரவேற்பு!

0
196

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அனைத்து அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரம் கூட்டதொடருடன் இணைந்ததாக நியூயோர்க் மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இராப்போசனத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இந்நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், பாரியார் ஜயந்தி சிறிசேனவும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

அதன் பின்னர் ஜனாதிபதிகள் தமது பாரியார்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: