டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0
269
Sign Up to Earn Real Bitcoin

தமது தனிப்பட்ட சட்டத்தரணிகளின் அலுவலகங்களில் (FBI) எவ்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் சோதனை நடத்தியமை, அவமானகரமானதும், தமது நாட்டின் மீதான தாக்குதல் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நிவ்யோர்க்கில் உள்ள அலுவலகங்களில் நேற்றைய தினம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது ஒரு ஆபாச நடிகைக்கு பணம் செலுத்தியமை தொடர்பான ஆவணங்களும் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளபோதே ட்ரம்ப் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: