டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்தது இப்படி தான்: பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வெளியானது!

0
379

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அதில் 10 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது.

புராரி பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 1-ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர்.

இதில் பத்து பேர் தூக்கில் தொங்கியபடியும், குடும்பத்தின் முத்தவரான நாரயணி தேவி தரையில் ரத்த வெள்ளத்திலும் இறந்து கிடந்தனர்.

இது கொலையா அல்லது தற்கொலை என விவாதம் நடைபெற்ற நிலையில் சொர்க்கத்தை அடையும் நோக்கில் மூடநம்பிக்கை காரணமாக தற்கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி பத்து பேரும் தாங்களே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதும், அவர்கள் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

நாரயணி தேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: