டெல்லியிலும் வெடித்தது மஹிந்தவுக்கு எதிரான போராட்டம்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையையடுத்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜனாதிபதி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸவினை நியமனம் செய்தமை ஜனநாயக விரோத செயல் என பேராட்டம் நடத்தப்பட்டதாக நடாத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் அவர்கள் தெரிவித்துள்ளனரர் எனவும் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதித் தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் அயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவரலக்ஷ்மியுடன் தான் திருமணமா! விஷால் வெளிப்படையாக கூறிய பதில்!
Next articleஅம்மன் கோயிலில் நிர்வாணமாக பூசை செய்யும் பெண்கள்!