டீ விற்று கோடீஸ்வரியான அமெரிக்க பெண்!

0
295

அமெரிக்காவை சேர்ந்த ப்ரூக் எட்டி, தனது காரில் இருந்தபடி டீ விற்று கோடீஸ்வரியாகி உள்ளார்.

2002ல் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்த எட்டிக்கு இந்திய தேசிய பானமான டீ யின் சுவை மிகவும் பிடித்துப் போனது.

மறுபடியும் அவர் அமெரிக்க சென்ற போது அவர் அங்குள்ள கொலொராடோ பகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு உணவகத்தில் தேடியும் இந்தியாவின் டீ சுவையைப் போல எங்கும் கிடைக்கவில்லை.

எனினும் ப்ரூக் எட்டி போன்ற சாதனைப் பெண்கள் கிடைக்காத பொருட்களை உருவாக்கி விடுவர் அல்லவா. அதுதான் நடந்தது.

2006ல் தனது காரின் பின் பகுதியிலேயே அதிக அளவில் டீ செய்து அதற்கேற்ற கலன்களில் வைத்து மக்கள் கூடுமிடங்களில் விற்க ஆரம்பித்தார்.

இஞ்சி மற்றும் மசாலா கலந்த பக்தி சாய் என்கிற அந்த ஐஸ் டீக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

சில நாட்களில் கொலொராடோ காபிக்கடைகளில் கூட இவை விற்பனை ஆக ஆரம்பித்தன. தன்னை ஒரு வெள்ளை நிறம் சார்ந்த பெண் எனக் கூறும் இவரது தாயும் தந்தையும் ஹிப்பி கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். இவர் பிறந்தது கொலொராடோவில் என்றாலும் வளர்ந்தது மிச்சிகன் என்கிறார்.

தனக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு பற்றிக் கூறும்போது, இந்தியாவுடனான என் உறவு என்பது மிகச் சிறந்த அதிர்வுகள் நிரம்பியது என்று கூறும் இவர், ஒவ்வொரு முறை இந்தியா வந்து போகும்போதும் புதுமையான ஏதோ ஒரு விஷயத்தை இவர் அறிமுகபடுத்துவதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வாரப் பத்திரிகையில் இவர் கூறியுள்ளார்.

இந்திய டீயின் கரைசலை கவர்ச்சிகரமான ஜாடிகளில் விற்பனை செய்வது இவரது விற்பனைத் திறன்களில் ஒன்று.

பக்தி டீயின் விற்பனை அதிகரிக்கவே இவர் அதற்கென ஒரு வலைத்தளம் தொடங்கினார். அதன் மூலம் தன் வாடிக்கையாளரை அதிகப்படுத்திய எட்டி அதன் பின் பக்தி டீயின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டில் இறங்கினார்.

இந்த டீயின் இஞ்சி தட்டுவதற்காக மட்டுமே இரண்டு பெரிய மிசின்களும் அவற்றை பயன்படுத்த இரண்டு வேலையாட்களும் தேவைப்பட்டது என்றால் இதன் வளர்ச்சியைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

இரட்டைக் குழந்தைகளின் தன்னந்தனி தாயான இவர் 2014 ஆம் ஆண்டின் தொழில் முனைவோர் இதழில் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருது பட்டியலில் முதல் ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

இந்த ஆண்டு, அவரது நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட வருவாய் 7 மில்லியன் டொலர்கள் ஆகும்.

விற்பனை அதிகரித்தால் தானங்களும் அதிகரிக்கும் என்பது ப்ரூக் எட்டியின் பழக்கமாக இருந்தது.

இந்த வருமானத்தின் மூலம் நிறைய அமைப்புகளுக்கு உதவி செய்து வரும் இவர் நன்கொடை அளிக்கின்ற நிறுவனம் உலகளாவிய சமூகத்தில் மாற்றத்திற்கான வழிவகுக்கும் என்று நம்புகிறார்.

பக்தி டீயின் ரசிகர்களுக்கென கீதா கிவிங் என்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ப்ரூக் எட்டி, இதன் மூலம் உலகெங்கும் உள்ள அனைவருக்கும் உதவிகள் செய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதாகக் கூறுகிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: