டிக் டாக்கில் பந்தயம்! இளைஞருக்கு நடந்த விபரீதம்.

0
200

டிக் டாக்கில் பந்தயத்திற்காக, கழிப்பறை கோப்பையை நாக்கால் தொடுவது போன்று வீடியோவினை பதிவிட்ட இளைஞா் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த லார்ஸ் (Larz) என்ற இளைஞர், கொரோனா தொற்றுள்ளவா்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து, அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவாது என்பதை நிரூபிப்பற்காக டிக் டாக்கில் பந்தயம் கட்டியுள்ளார்.

அதற்காக, கழிப்பறை கோப்பையை நாவால் தொடுவது போன்ற வீடியோவையும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவிட்ட சில நாட்களிலேயே தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை லார்ஸ் பதிவிட்டுள்ளார்.

எனவே கொரோனா வைரஸின் ஆபத்தை உணராமல் சமூகவலைதள பெருமைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: