டக்ளஸ் தேவானந்தாவை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சுமந்திரன்!

0

வவுனியாவிற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பொன்னாடை போர்த்தி திலகமிட்டு வரவேற்றார்.

வவுனியா வைரவ புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு இன்று இரவு அமைச்சர் சென்ற போதே குறித்த நகரசபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர், ஆதரவாளர்கள் மலர்லாலை அணிவித்து அமோக வரவேற்பளித்தனர்.

இதன்போது வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆதரவாளர்கள் கட்சி கொடியுடன் ஊர்வலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஆலயத்திற்கு அழைத்து வந்தனர்.

ஆலய புனர்நிர்மாண பணிகளை பார்வையிட்ட அமைச்சர் விசேட பூசை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான க.சுமந்திரன், பாலபிரசன்னா, ஆலய நிர்வாகத்தினர், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆபத்தான நிலையில் யாழ். இளைஞன்! சுவிஸில் ஏற்பட்ட பாரிய விபத்து!
Next articleஅம்பலப்படுத்திய மைத்திரி! ரணிலின் சூழ்ச்சித் திட்டத்தை!