ஜோதிகா நடிப்பில் புதிய படம் ‍-“பொன்மகள் வந்தாள்”

0

ஜோதிகா நடிப்பில் புதிய படம் ‍-“பொன்மகள் வந்தாள்” Jothika

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள “பொன்மகள் வந்தாள்” படத்தில் பிரபல இயக்குனர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். இதில் ஜோதிகாவுடன் இயக்குனர்களான பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொடைக்கானலில் எடுக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியை நிறுத்திய அதிபர் டிரம்ப்.
Next articleகுடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்குமாறு பிரபல இயக்குனர் ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை!