ஜெயித்தாலும் இதைத்தான் செய்வேன்- ரமணியம்மாள் சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

0
399

பிரபல பாடல் நிகழ்ச்சியில் வயது பற்றி யோசிக்காமல் இளசுகளுக்கும் டப் கொடுத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள்.

இவர் தற்போது பாடல் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்குள் இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, பேரக் குழந்தைகளுக்கும், பாட்டிக்கும் உண்டான போர் இது என்று தான் கூறுவேன். எனக்கு ரஜினி அவர்கள் மிகவும் பிடிக்கும், அவரது பாடலை இறுதிச்சுற்றில் பாட இருக்கிறேன். என்னை ஜெயிக்க வைக்கிறது எல்லாம் இன்றைய கால பிள்ளைகளிடம் உள்ளது.

சம்பாதிக்காத புருஷனை வைத்துக்கொண்டு 8 பிள்ளைகளை வீட்டு வேலை செய்துதான் காப்பாற்றினேன், எனக்கு அதுதான் தெரியும்.

நாளைக்கு நிகழ்ச்சியில் ஜெயித்து சினிமாவில் பிஸியானாலும் பழையதை மறக்காமல் இந்த வேலையை தான் செய்வேன் என்று கூறியுள்ளார். புகழ் வந்ததும் பழையதை மறக்கும் மக்களிடையே ரமணியம்மாளின் உணர்வை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: