ஜெயலலிதா போல் திருமணம் செய்யாமல் வாழ்வேன்! கார்த்திக்கு நான் என்பதை காண்பிப்பேன்.. நடிகை ஸ்ரீ ரெட்டி!

0
1034

தன்னுடயை வலி என்ன என்று நடிகர் கார்த்திக்கு உணர்த்துவேன் என நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மீது பாலியல் புகார்களை கொடுத்து வருகிறார்.

தமிழ் பிரபலங்களான ஏஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கடுமையாக குற்றம் சுமத்திய ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடப் போவதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றும் நிரூப்பிக்க முடிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்தார். மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கார்த்திக்கு பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் ஸ்ரீரெட்டி, “நான் நடிகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறேன். மதிப்பிற்குரிய நடிகர் கார்த்தியின் வார்த்தைகள் என்னை புண்படுத்துகின்றன. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புகிறேன், இல்லையென்றால் என்னுடைய வலி என்ன என்பதை உங்களுக்கு உணர்த்துவேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காத்தானே தவிற பயன்படாத அறிவுரைகள் கூற இல்லை என்று குறிப்பிட்டு, என்னுடைய கஷ்டத்தை நினைத்து பாருங்கள். லாஜிக் பேசாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தற்போது மறைந்த முதலைமைச்சர் செயலலிதாவுன் புகைப்படத்தை வெளியிட்ட அவர் அம்மா உயிரோடு இருந்திருந்தால் நான் நீதி பெற்றிக்க முடியும். ஏதேனும் ஒரு பார்வையாவது என்னை காப்பாற்ற வேண்டும் அம்மா நீங்கள் அனைத்து பெண்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரைப் போலவே நானும் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. என் வாழ்க்கையை பெண்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: