சுளுக்கை ஈஸியாக போக்கலாம்! இந்த மருத்துவத்தை பின்பற்றுங்கள்!

0
8011

நரம்புகளின் தசை நாறுகள் லேசாக பாதிக்கப்பட்டால், அது சாதார வகை சுளுக்கு. அதுவே தசை நாறுகள் கிழிந்து, நரம்புகள் பாதிக்கப்படுவது கடினமான சுளுக்கு ஆகும்.

இந்த சுளுக்கு பிரச்சனையானது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக் கூடியது.இந்த சுளுக்கில் மொத்தம் 44 வகைகள் உள்ளது.

அதில் சாதாரண சுளுக்கு பிரச்சனையை குணமாக்க சில எளிய மருத்துவக் குறிப்புகளை தெரிந்துக் கொள்வோம்!

டிப்ஸ் – 1
ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்த பின் அதை கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும்.

ஒருநாள் கழித்து வெந்நீரில் கழுவி விட்டு மீண்டும் பற்றும் போட வேண்டும். இவ்வாறாக தொடர்ந்து 3 நாட்கள் பற்று போட்டு வந்தால் சுளுக்கு நீங்கும்.

டிப்ஸ் – 2
பூண்டை உரித்து அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

டிப்ஸ் – 3
பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்து அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து காய்ச்சி, இதமான சூட்டில் அதை சுளுக்கு உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

டிப்ஸ் – 4
முருங்கைப் பட்டை, பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து சூடு செய்து இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் சுளுக்கு பிரச்சனை விரைவில் நீங்கும்.

டிப்ஸ் – 5
கற்ப்பூரம் மற்றும் மிளகு தூளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதை ஒரு துணியில் நனைத்து அதை கையில் ஏற்படும் சுளுக்கு பிரச்சனைக்கு பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: