சொந்த மகள்- வளர்ப்பு மகள் என பலரை கற்பழித்த கொடூர தந்தை!

0
354

அவுஸ்திரேலியாவில் சொந்த மகள்கள் மற்றும் வளர்ப்பு பிள்ளைகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இரண்டு நபர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக மொத்தம் 112 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் Taskforce Mirzam. 45 வயதான இவரை பொலிசார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளனர்.

அப்போது கைது செய்த நபர் குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டில் Taskforce Mirzam முதன் முதலில் தன்னுடைய 4 வயது இரண்டு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2011 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் வளர்ப்பு மகள் மற்றும் மகனையும் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியுள்ளார். அந்த சிறு குழந்தைகளுக்கு வயது 5 முதல் 6 வரை மட்டுமே.

இதுமட்டுமின்றி கடந்த 2011-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியையும் இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்படி இவர் மீது 83 குற்றச்சாட்டுகள் உள்ளதன் காரணமாகவே கைது செய்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதே போன்று 56-வயது நபரை கைது செய்துள்ளதாகவும் அவர் மீதும் 23 குற்றங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இருவருமே பெற்ற மகள்களையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி Taskforce Mirzam சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ சிக்கியுள்ளதால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனவும், இவர்கள் இருவரும் வரும் புதன் கிழமை Perth மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: