இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாதாம்.

0
12329

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்பவர்களாகவும், தைரியம் மிக்கவர்களாகவும், இடம், பூமி போன்றவைகளுக்கு அதிபதிகளாகவும் விளங்குவர். தைரியகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க் குரிய கிழமையில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், சாமர்த்தியசாலிகளாகவும் திகழ்வர். காவல்துறை, மருத்துவம், மரம், மருந்து போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களாகத் திகழ்வர். ‘செவ்வாய் வெறும் வாய்’ என்பது பழமொழி. ஆனால் ‘செவ்வாய் வருவாய் தரும் நாள்’ என்பது புதுமொழி.

செவ்வாய்கிழமை பிறந்தவர்களுக்கு எந்த வேலையையும் அரைகுறையாகச் செய்வது பிடிக்காது. எதிர்கால தேவைகளுக்காக சிறிதளவாவது சேமித்து வைப்பவர்கள், உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தைப் பெற்றவர்கள் இவர்கள். நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாகத் திகழ்வர். ரகசியங்களைக் காப்பாற்றுவதில் வல்லவர்கள். செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் கொடுத்துதவும் எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: