செல்பி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞன்!

0
273

பலங்கொடயில் அருவி ஒன்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பெலிஹுல்ஓய பஹன்துடா அருவில் குளிக்க சென்ற இளைஞன் ஓருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சஞ்சய் கிருஷ்ணா என்ற தமிழ் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பலங்கொட சென்ற இளைஞர்கள் 10 பேர் பெலிஹுல்ஓயவில் கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதன்போது சிலர் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, ஹன்துடா அருவியில் விழுந்த ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பலங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்து நிறைந்த இவ்வாறான பகுதிகளில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

மிகவும் நட்பு ரீதியாக பழகக் கூடிய கிருஷ்ணாவின் அகால மரணம் கொழும்பு வாழ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: