சென்னைக்கு இதற்காக தான் வந்தோம்! வெளிமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திடுக்கிடும் வாக்குமூலம்!

0

கவரிங் நகைகளை மாற்றி அதற்கு பதிலாக தங்கநகைகளை சென்னையில் தான் எளிதாக பெறமுடியும் என்பதற்காகவே சென்னை வந்தோம் என இளம் பெண் உட்பட ஒரு கும்பல் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் நவரத்தன்சிங் என்பவர் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடந்தி வரும் நிலையில் அங்கு 25 வயதான இளம் பெண்ணும், 50 வயதான நபரும் வந்தனர்.

பின்னர் தங்களிடம் பழைய தங்கக் கம்மல் இருப்பதாகவும் அதற்கு பதிலாக தங்க செயின் வேண்டும் என்றும் கூறினர்.

இதையடுத்து அங்கிருந்த 6 கிராம் எடையுள்ள தங்கநகையை அவசரமாக தேர்வு செய்து எடுத்துகொண்ட நிலையில் அதற்கு பதிலாக 7 கிராம் எடையுள்ள கம்மல்களை அப்பெண் கொடுத்தார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து வேகமாக கிளம்பிய நிலையில், கடை ஊழியர்கள் சந்தேகமடைந்து கம்மலை சோதித்தனர்.

அப்போது அது கவரிங் என தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் டெல்லியைச் சேர்ந்த கிசன்லால் (69) என்பவர் சிக்கினார்.

விசாரணையில், அவர் டெல்லியிலிருந்து குடும்பத்தோடு வந்து, கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி அவரின் மகன் சஞ்செய் மற்றும் உறவினர்கள் சோனுகுமார், அவரின் மனைவி லதா ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையில், தமிழகத்தில் தான் அதிகளவில் நகைகளை அணிவார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்ததும், மேலும் சிலரை இதே போல ஏமாற்ற திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

கொள்ளைக் கும்பல் அளித்த வாக்குமூலத்தில், சென்னையில் தான் கவரிங் நகைகளை எளிதில் மாற்ற முடியும் என்றுதான் இங்கு வந்தோம். கொண்டு வந்த நகைகள் அனைத்தையும் மாற்ற நினைத்தோம், ஆனால் அதற்குள் பொலிசார் பிடித்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் நுழைந்த ராட்சத பாம்பு! வெளியேற்ற பெண்ணின் போராட்டத்தைப் பாருங்க!
Next articleஉதவுவதாக கூறி பள்ளி மாணவியை சீரழிக்க முயன்ற வாலிபர்! சரமாறியாக அடித்து துவைத்த கிராம மக்கள்! வீடியோ!