செக்ஸ் பிரச்சினை என்பது ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினை கிடையாது. இந்த பிரச்சினை பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெண்களுக்கு இருக்கும் செக்ஸ் பிரச்சினை குறித்து நாம் அதிகமாக பேசுவதில்லை. ஏன் பெண்களுக்கே இப்படியொரு பிரச்சினை இருப்பது தெரியாமல் இருக்கிறது. அதைப் பற்றிய கட்டுரை தான் இது.
முதல் நிலை பாலியல் பிரச்சினை
இந்த நிலையில் பெண்களுக்கு பாலுணர்வு என்றே எண்ணமே இருக்காது. உடலுறவு ரீதியாக அவர்கள் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். இதனால் அவர்கள் உடலுறுவில் ஈடுபடும் போது அதை அதிகளவில் விரும்ப மாட்டார்கள். இந்த மாதிரியான பிரச்சினை வருவதற்கு முக்கிய காரணம் செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது தான்.
இரண்டாம் நிலை பாலியல் பிரச்சினை
பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பாலியல் பிரச்சினை இது. கடந்த காலத்தில் ஏற்பட்ட செக்ஸ் உணர்வு மாதிரி போகப் போக உணர்வுகள் இருப்பதில்லை. இந்த பிரச்சினை பொதுவாக உறவுகளில் சிக்கல், களைப்பு, முன்னர் ஏற்பட்ட செக்ஸ் அனுபவங்கள் இவற்றால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
குறைந்த மகிழ்ச்சி
குறைவான பாலுணர்வு தூண்டல், குறைவான செக்ஸ் உணர்வால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதுக்கு முக்கிய காரணம் பெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் இரத்த ஓட்ட தடை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களால் இன்பமாக உடலுறவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை . இது பொதுவாக இரத்த பாதிப்பு, அந்தரங்க பகுதிகளில் உள்ள நரம்புகள் பாதிப்பால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
காயங்கள்
சில பேருக்கு செக்ஸில் ஏற்பட்ட காயங்களால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இது எளிதாக பெண்களின் மனநிலையை பாதித்து விடுகிறது. இதற்கு சைக்கோசெக்ஸூவல் தெரபி மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம். உடலுறவு சார்ந்த பயங்களை போக்கலாம்.
பாலியல் இயல்பின்மை
பாலியல் இயல்பின்மையும் பெண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னை பொதுவாக டயாபெட்டீஸ், மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சினை, உறவுகள் பிரச்சினை, களைப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது. இது ஒரு சூழ்நிலை சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகி தீர்வு காணலாம்.
விருப்பமின்மை
பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் இல்லாமல் இருப்பதற்கு டெஸ்ட்டோடிரான் என்ற ஹார்மோன் குறைவும் காரணமாக அமைகிறது. இந்த டெஸ்ட்டோடிரான் என்ற ஹார்மோன் கருப்பையில் மற்றும் அட்ரீனல் சுரப்பியில் சுரக்கிறது. இது நேரடியாக பெண்களுக்கு செக்ஸில் நாட்டத்தை குறைக்கிறது. அதிக டெஸ்ட்டோடிரான் இருக்கும் பெண்கள் செக்ஸில் நாட்டம் உடையவர்களாகவும், குறைந்த டெஸ்ட்டோடிரான் உள்ளவர்கள் செக்ஸில் நாட்டம் இல்லாமலும் இருக்கிறார்கள்.
டிஸ்பெரூன்யா (வலி மிகுந்த புணர்ச்சி)
பெண்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் மற்றொரு பிரச்சினை உடலுறுவின் போது வலி ஏற்படுவது. இந்த பிரச்சினை பொதுவாக மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையுது போது யோனி பகுதி வறண்டு போகும் போது அதிகமான வலியை ஏற்படுத்துகிறது.
வெஜினிமெஸ்
இது பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். யோனி பகுதியை சுற்றியுள்ள தசைகளுக்கு வெஜினிமெஸ் என்று அழைக்கப்படுகிறது. இது உடலுறவில் ஈடுபடும் போது வலிகளை உண்டாக்கும்.
கர்ப்ப கால பயம்
சில பெண்கள் தேவையற்ற கருத்தரிப்பு நிகழ்ந்து விடும் என்று செக்ஸை குறித்து பயப்படுகின்றனர். இதுவும் பெண்களுக்கு செக்ஸ் குறித்து பிரச்சினை ஏற்படுத்துகிறது.