கடவுளை வணங்கும் போது இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள்! நன்மை உங்களுக்கே!

0
6183

நாம் அனைவரும் கடவுளை வணங்கும் போது மந்திரங்களைச் சொல்வது வழக்கம்.

ஆனால் அப்படி மந்திரங்களை சொல்லும் போது, நாம் ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்த மந்திரத்தின் முழு பலனையும் பெற முடியும்.

இதனால் நம்மைச் சுற்றி ஒரு எதிர்மறை ஆற்றல் தடுக்கப்பட்டு, நேர்மறையான ஆற்றல்கள் உருவாகும்.

கடவுளை வணங்கும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்ன?

கடவுளை வணங்கும் போது, நாம் பகல் நேரத்தில் மட்டுமே மந்திரங்களை கூற வேண்டும். அதிலும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-5 அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் மந்திரங்களை கூறி வணங்குவதே சிறந்தது.

காலையில் கடவுளை வணங்கி, மந்திரங்களைச் சொல்லும் போது, கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து கொண்டு சொல்ல வேண்டும். அதுவே இரவில் என்றால் வடக்கு திசையை நோக்கி அமர்ந்துக் கொண்டு சொல்ல வேண்டும்.

மந்திரங்களை சொல்லும் போது, சரியான நிலை அல்லது ஆசன நிலையில் அமர்ந்து கொண்டு சொல்ல வேண்டும். அதிலும் பத்மாசன நிலையில் அமர்ந்து சொல்வது சிறந்தது.

கடவுளை வணங்கி, மந்திரங்களை சொல்லும் போது, நாம் அமர்ந்த இடத்தை விட்டு வேறு ஒரு இடத்தை மாற்றக் கூடாது. ஏனெனில் மந்திரம் சொல்ல ஆரம்பித்த இடம் ஆற்றல் நிறைந்த இடமாக மாறி இருக்கும்.

நாம் தினமும் காலையில் அல்லது இரவில் கடவுளை தொழுது, மந்திரங்களை சொல்லும் போது, தினமும் ஒரே நேரத்தில் தான் கடைபிடிக்க வேண்டும்.

கடவுளைத் தொழுது மந்திரங்களை சொல்லும் போது, துளசி, ருத்ராட்சை அல்லது சந்தன மணிகளைப் பயன்படுத்தி 108 முறை மந்திரங்களை சொல்வது மிகவும் நல்லது.

கடவுளை வணங்கி, மந்திரங்களைச் சொல்ல பயன்படுத்தும் ருத்ராட்சம் போன்ற மாலைகளை, மற்றவர்கள் பார்க்கும் படி சொல்வதைத் தவிர்த்து விட வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: