சுவாதி முதல் ரேவதி வரை குருப்பகவனால் திடீர் யோகங்களை பெறபோவது எந்த நட்சத்திரகாரர்கள்?

0
1352

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5-ல் இடம் பெயர்கிறார்.

இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும்.

அந்தவகையில் அஸ்வினி முதல் சித்திரை வரையுள்ள நட்சத்திரக்காரர்களுக்கான பலன்களை பார்தோம்.

தற்போது சுவாதி முதல் ரேவதி வரையுள்ள நட்சத்திரக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை பற்றி இங்கு பார்ப்போம்.

சுவாதி
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரத்திலிருந்து ஐந்தாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: யானையை பூனையாக்குவதும், பூனையை யானையாக்குவதும் என்பது போல எந்த விஷயத்திலும் சின்னதை பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலையை அறிந்த சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் தேவையான உதவிகள் கிடைக்கும்.

பண வரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் நீங்கும். அரசியல்வாதிகள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமையில் மாரியம்மனை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

விசாகம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு மூன்றாவது நட்சத்திரத்திலிருந்து நான்காவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதிர்பார்க்காமல் காரியங்களை செய்யும் குணமுடைய விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.

செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரியத் தடைகள் கூடுதல் செலவு உண்டானாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்னைகள் குறையும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மனத்தடுமாற்றம் நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: திருக்கடையூர் அபிராமியம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரியானுகூலம் ஏற்படும்.

அனுஷம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரத்திலிருந்து மூன்றாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: எதையும் தாங்கும் இதயம் என்பதற்கேற்றார் போல் எதைக்கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் மனக்கவலை உண்டாகும்.

எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது.

குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாகப் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மன நிம்மதி பெறுவார்கள்.

மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

கேட்டை
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு உங்கள் நட்சத்திரத்திலிருந்து இரண்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணர்ந்து வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும்.

திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பெருமாளை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்னை தீரும்.

மூலம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஏழாவது நட்சத்திரத்திலிருந்து உங்கள் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறுபக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் மனதில் உறுதி பிறக்கும்.

எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்னைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

பூராடம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஆறாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி ஏழாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதற்கேற்றவாறு எதைச் செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும்.

வீண்பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களைக் கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

கலைத்துறையினர் நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை அதிகரிக்கும்.

மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாகப் படிப்பது நல்லது.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

உத்திராடம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி ஆறாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் தன்னம்பிக்கை வளரும்.

பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

கலைத்துறையினர் அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

திருவோணம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி நான்காவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும்.

உடற்சோர்வு மன சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரைப் பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்

அவிட்டம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி நான்காவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கப்பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கித் தருவீர்கள்.

பெண்கள் அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

கலைத்துறையினர் தங்கள் வேலைகளை கவனமாக செய்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பணவரத்து தாமதமாகலாம்.

மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

சதயம்
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி இரண்டாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நான் சொல்வதுதான் சரி என்று உறுதியாக கூறும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் காரிய அனுகூலங்கள் ஏற்படும்.

மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்கள் பாடங்களைப் படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

பூரட்டாதி
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி இரண்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: குடும்பப்பாசம் மிகுந்தவரான பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும்.

சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் போன்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.

குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நல்லது.

பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவைகள் பூர்த்தியாகும்.

மாணவர்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்

உத்திரட்டாதி
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு இருபதாவது நட்சத்திரத்திலிருந்து இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காத உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் பிரச்னையை கண்டு பயப்படமாட்டீர்கள்.

இந்த குரு பெயர்ச்சியில் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும்.

எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: பவுர்ணமி அன்று நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரேவதி
கிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பத்தொன்பதாவது நட்சத்திரத்திலிருந்து இருபதாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.

பலன்: மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. இந்த குரு பெயர்ச்சியில் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள்.

எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வரவாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்னைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது.

பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு தங்கள் பக்கமுள்ள நியாயம் நிலைக்கும்.

மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரியத் தடை, தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: காவல்தெய்வத்தை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்

அஸ்வினி முதல் சித்திரை வரை எந்த நட்சத்திரக்காரர்களுக்கு குருபகவான் செல்வங்களை அள்ளி தர போகிறார்?

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநவம்பர் மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம்! உங்களது ராசி இருக்குதா?
Next articleஅரைகுறை ஆடையுடன் கடற்கரையில் அமலாபால்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள் !