கை, கால், இடுப்பு என்று உடம்பில் ஏதாவது ஓரிடத்தில் அடிபட்டு வீக்கம் வந்தாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ புளியை இப்படி பயன்படுத்துங்கள் உடனே சரியாகிடும்!

0

நாம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதில் முக்கியமாக புளி இல்லையென்றால், பல நேரம் உணவு ருசி இருக்காது. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு.

கை, கால், இடுப்பு என்று உடம்பில் ஏதாவது ஓரிடத்தில் அடிபட்டு வீக்கம் வந்தாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ.. புளியை நன்றாக கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ்பதத்துக்கு தயாரித்துக் கொள்ள வேண்டும். அடிபட்ட இடத்தில் இந்தக் கூழை அளவான சூட்டில் பத்து போட்டால் வீக்கமும், சுளுக்கும் உடனே சரியாகும்.

வெயில் காலங்களில் நீர்க்கடுப்பு நம்மை வாட்டி எடுத்துவிடும். ஆண்குறியில சிலருக்கு கடுமையான எரிச்சலும் வலியும் வரும். இந்த மாதிரி சமயங்களில் புளியங்கொட்டையை முழுவதுமாகவோ அல்லது அதன் தோலை மட்டுமோ எடுத்து சாப்பிட்டால் உடனடி குணம் கிடைக்கும்.

ஆளை உருக்கும் கணைச்சூடு உள்ளவர்கள் இலையை எடுத்து அதோடு சின்ன வெங்காயத்தை சேர்த்து இடித்து, சாறு பிழிந்து 100 மில்லி அளவுக்கு சாப்பிட வேண்டும்.

வாரம் ஒரு தடவை என்று 3 முறை இப்படி சாப்பிட்டால் கணைச்சூடு தணியும். வயித்துக்கோளாறும் சரியாகும். இந்த சாறை குடித்த பிறகு, 3 மணி நேரத்துக்கு தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

உடம்பு உஷ்ணமாகி வயிற்று வலியால் துடிக்கிறவர்களுக்கு புளியை தண்ணீரில் ஊறப்போட்டு நன்றாக கரைத்து, அதோடு பனைவெல்லம் (கருப்பட்டி) சேர்த்துக் குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். வெயில் காலத்தில் இந்தக் கரைசல் கைகண்ட மருந்தாக இருக்கும்.

புளியம்பூ, புளியம்பிஞ்சு இரண்டையும் தேவையான அளவு க.மிளகாய், உப்பு சேர்த்து இடித்து காய வைக்க வேண்டும். இதை ஊறுகாய் மாதிரி சாப்பாட்டோடு சேர்த்துக்கொண்டால் உடல் உஷ்ணம் தணிவதோடு நல்ல பசியும் உண்டாகும்.

புளியில் இப்படி நல்ல குணங்கள் நிறைய இருந்தாலும், அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சு என்கிற மாதிரி, ஒரு சில நோய்களுக்கு புளி ஆகாது. அதனால் சமயமறிந்து பயன்படுத்துவது நல்லது

மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

முதலில் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். அதிகபட்சமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும்.

100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.

அதேபோல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.

மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு.

கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர சீகைக்காய் பொடி தயார் செய்வது எப்படி?
Next article100 மில்லி தேங்காய்ப்பால் உடலுக்கு பலவிதமான நன்மைகளை பெற்றுத் தருகிறது !