சுர்ஜித்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இனி எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது !

0
480

2 வயது சிறுவன் சுஜித் இந்த குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு இனி எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது என்ற மனித நேயம் உள்ள நபர்கள் இந்த செய்தியை உங்கள் சொந்தங்களுக்கு தெரியப்படுத்துங்க.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மொட்டையாண்டியில்..

யார் செய்த பிழை (இது முகநூலில் வந்தது)

போர்வெல்லில் விழுந்த குழந்தைக்கு பிரார்த்தனை செய்துகொண்டே, பிதுங்கி வழியும் பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தான் 3 குழந்தைக்கு தகப்பன் ஒருவன்.

போர்வெல் குழந்தைக்கு பரிதாபப்பட்டுக்கொண்டே 16 பள்ளி பிள்ளைகளை தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றான் ஒருவன். போர்வெல்லை மூடாதவனை திட்டிக்கொண்டே ஒன்வேயில் பைக்கை ஓட்டிச் சென்றான் ஒருவன்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு பஸ்ஸுக்கு சான்றிதழ் கொடுத்துவிட்டு ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்கிறான் ஒருவன்.

சந்திராயனுக்கும் போர்வெல்லுக்கும் முடிச்சுப் போட்டு அரசாங்கத்தை திட்டிக்கொண்டே 1500 ருபாய்க்கு டிக்கெட் எடுத்து கூத்தாடியின் சினிமாவை பார்க்க சென்றான் ஒருவன்.

சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக்கொண்டே ரோட்டோர டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒருவன்.

மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக்கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து அப்லோட் செய்கிறான் ஒருவன்.

மக்கள் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும்வரை இப்படித்தான் இருக்கும் என்று திட்டிவிட்டு, 50000 ஆயிரம் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் வாங்குகிறான் ஒருவன்.

பொருளாதாரம் சரிந்து போனதால் மனம் உடைந்து தினமும் 500 ரூபாய் டாஸ்மாக் க்கு வரி கட்டுகிறான் ஒருவன். நீர் வாங்கவும், பீர் வாங்கவும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டே, தொழிற்சாலைகளால்தான் காற்று மாசு படுகிறது என்கிறான் ஒருவன்.

சினிமாவில் அவுத்து போட்டு ஆடிவிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறாள் ஒருத்தி.நிர்பயாவிற்கு பிறகு 40000 நிர்பயாவை பார்த்தாச்சி.

சுஜித்துக்கு பிறகு பல சுஜித்தையும் பார்க்கத்தான் போகிறோம்.
அடுத்தவர் முதுகை பார்த்து சிரிக்கும் எவனும் தன் முதுகை சுத்தமாக வைப்பதில்லை.

முன்னெச்சரிக்கை என்று ஏட்டில்தான் படித்திருக்கிறேன். பின்னெச்சரிக்கை என்பதை மட்டும் தான் நாட்டில் பார்க்கிறேன். இதுவும் கடந்து போகும். இதைவிட பெரிய பொழுதுபோக்கு வந்தால். ஆம் அனைத்தையும் பொழுதுபோக்காகத்தான் விற்பனை செய்கிறான் ஒருவன்.

தனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கு பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது. நமக்கு உணவு இல்லை என்றாலும் பொழுதுபோக்குதானே முக்கியம்.

இது முகநூலில் வந்தது யார் எழுதினார் என்று தெரியவில்லை. நகல்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 29.10.2019 செவ்வாய்க்கிழமை !
Next articleசுர்ஜித்தை நானே காப்பாத்தி இருப்பேன் அதற்கு இவர்கள் என்னை விடல! சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்.