சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குரு பகவான் தனது சொந்த ராசிக்கு செல்கிறார். இதனால் 12 ராசிகளும் பெறப்போகும் அதிஸ்டம் என்ன!

0

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குரு பகவான் தனது சொந்த ராசிக்கு செல்கிறார். இதனால் 12 ராசிகளும் பெறப்போகும் அதிஸ்டம் என்ன!

குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான மீன ராசிக்கு நாளை 13 ஆம் திகதி காலை 11.23 மணிக்கு செல்லவிருக்கிறார்.

ஒருவரது ஜாதகத்தில் குருவின் பலம், அந்நபரின் உள்ளுணர்வு, மரியாதை, நற்பெயர் போன்றவற்றை வரையறுக்கிறது.

இது ஒரு முக்கியமான கிரகம் என்பதால், இதன் பெயர்ச்சி வாழ்வில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இப்படிப்பட்ட குரு தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாவார். இப்போது குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு நாளை நாள் சிறப்பாக ஆரம்பமாகும். எனினும், அதிக செலவுகள் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். நீங்கள் நிலம் அல்லது வீடு வாகனத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்
இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வருமானம் பெருகுவது மட்டுமின்றி, நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை யோகம் உண்டு.

மிதுனம்
உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நாளை முதல் கௌரவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும்.

கடகம்
குரு சொந்த வீடு செல்லும் காலம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் மட்டுமின்றி, எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும், அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ள சொந்தக்காரர்கள் தொடர்ந்து சதி செய்வார்கள். இருப்பினும் அனைத்தையும் முறியடித்து, வெற்றி பெறுவீர்கள்.

கன்னி
குரு உங்களுக்கு பல இன்ப அதிர்ச்சிகளை கொடுக்க உள்ளார். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையும். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்ய விரும்பினால், அதற்கு குரு சாதகமாக இருந்து நற்பலனை வழங்குவார்.

துலாம்
குருவினால் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் ரகசிய எதிரிகள் நிறைய இருப்பார்கள். உங்களின் சொந்தக்காரர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள் ஆனால் அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். இருப்பினும் கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்
விருச்சக ராசிக்கும் இந்த காலக்கட்டம் வரப்பிரசாதமாக இருக்கும். எந்த ஒரு பெரிய வேலையைத் தொடங்க நினைத்தாலும், ஒப்பந்தம் போட்டாலும், வேலை மாற நினைத்தாலும், எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

தனுசு
தனுசு தங்களின் பணியிடத்தில் எதிர்பாராத பல முடிவுகளைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். நீங்கள் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மகரம்
குரு பகவான் உங்களுக்கு நிறைய தைரியத்தையும், ஆற்றலையும் வழங்குவார். உங்கள் முடிவுகளும் செயல்களும் பாராட்டப்படும். சமூக அந்தஸ்தும் உயரும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். தைரியமான இயல்பினால், மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதாகக் கட்டுப்படுத்துவீர்கள். பயணங்களால் நற்பலன் கிடைக்கும்.

கும்பம்
நீண்ட காலமாக செய்ய நினைத்துக் கொண்டிருந்த விஷயத்தை இனி செய்து முடிப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் மற்றும் தங்க நகைகள் போன்ற பொருட்களை வாங்க அதிக பணம் செலவழிப்பீர்கள். உங்களின் பேச்சுத் திறமையின் மூலம் எந்தச் சூழலையும் எளிதாகக் கட்டுப்படுத்துவீர்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் ஒரு முழுமையான வரப்பிரசாதமாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி காண்பீர்கள். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், முடிவெடுப்பதில் தாமதிக்காதீர்கள். ஏனெனில் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 13.04.2022 Today Rasi Palan 13-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 14.04.2022 Today Rasi Palan 14-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!