சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் ஒரு மாத காலத்திற்கு எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள்! அதிஸ்டம் யார் பக்கம்!

0

சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் ஒரு மாத காலத்திற்கு எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள்! அதிஸ்டம் யார் பக்கம்!

மேஷம் ராசிக்காரர்களுக்கு: மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தைரியம் அதிகரிக்கும். அதேப் போல் உங்களின் புரிதலும், பொறுமையும் அதிகரிக்கும். இக்காலத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு: இக்காலத்தில் உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கார், நிலம், வீடு போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலமாக இருக்கும். இக்காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதேப் போல் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு: மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள்.

கடகம் ராசிக்காரர்களுக்கு: நிதி பரிவர்த்தனைகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் சிலரின் பகுத்தறிவற்ற நடத்தையை எதிர்கொள்வீர்கள் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

தொழில் ரீதியாக வியாபாரிகளுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு: உங்கள் கடின உழைப்பு உங்களின் வருமானத்தில் புகழைக் கொண்டு வரும். இது உங்களின் தோல்விகளை சமன் செய்யும். வேலையில் சற்று குழப்பம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான சிறு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு: கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய திட்டத்தின் மூலம் வெற்றியையும், புகழையும் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆதரவு உங்களின் பல விருப்பங்களை நிறைவேற்றக்கூடும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு: இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழிலில் பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அதோடு அதிக லாபத்தையும் பெறுவீர்கள். எந்தவொரு வேலையிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு இருக்கும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு: இக்காலத்தில் உங்கள் உறவுகள் பாதிக்கப்படலாம். நிதி நீதியாக, இக்காலமானது உங்களை தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை நோக்கித் தள்ளும், இது பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

ஆனால் தொழிலில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இதனால் உங்கள் ரகசிய எதிரிகளின் பொறாமை அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு ராசிக்காரர்களுக்கு: இக்காலத்தில் வேலைக்கு பதிலாக, பிறவற்றில் முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல வாய்ப்புகளால் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவார்கள். உத்தியோகத்தில் நல்ல வருமான உயர்வு ஏற்பட்டு மனநிறைவை அடைவீர்கள்.

மகரம் ராசிக்காரர்களுக்கு: உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். சிறு விஷயங்களுக்காக விவாதம் செய்வதைத் தவிர்த்து, பொறுமை காக்க முயற்சி செய்யுங்கள்.

நிதி ரீதியாக, இக்காலத்தில் கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையை மாற்றுவதற்கு நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இல்லை.

கும்பம் ராசிக்காரர்களுக்கு: கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இல்லற வாழ்வில் அமைதியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகளின் செயல்களால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

மீனம் ராசிக்காரர்களுக்கு: மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் காதவிப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். நிலம், கட்டிடம், வாகனங்கள் வாங்குவதால் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் நிச்சயம் சுப பலன்களைப் பெறுவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 14.07.2022 Today Rasi Palan 14-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 15.07.2022 Today Rasi Palan 15-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!