சீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன? ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ! நேற்று இரவு நடந்தது இதுதானா !

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் அதிகம் பிரபலமானவர் சித்ரா. இந்த சீரியலில் இவர் பேசும் தமிழுக்கும், புடவைக்கும் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்த நிலையில் இவர் இன்று நம்மோடு இல்லை, தற்கொலை செய்திருக்கிறார், இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இவரது திடீர் தற்கொலைக்கு மன அழுத்தம் காரணம் என கூறுகின்றனர்.

ஆனால் சித்ராவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் ஹோட்டலில் ஏதோ நேற்று சண்டை வர நான் உடை மாற்ற வேண்டும் வெளியே செல்லுங்கள் என அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்கின்றனர்.

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா இறப்பதற்கு முன்னர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அவர் மரணத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் சித்ரா, மேலும் வேலு நாச்சி, சரவணன் மீனாட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹொட்டலில் திடீரென தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலை என கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் இறப்பதற்கு முன்னர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் மகிழ்ச்சியான மனநிலையிலேயே அவர் காணப்படுகிறார்.

இதனால் இது தற்கொலை தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதாவது இரவு வரை மகிழ்ச்சியாக இருந்த சித்ரா எப்படி திடீரென நட்சத்திர ஹொட்டலுக்கு சென்று தற்கொலை செய்வார், இதில் மர்மம் உள்ளது என கூறி வருகின்றனர்.

எப்படியிருந்தாலும் விசாரணையின் முடிவில் இது தொடர்பில் சரியான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சித்ரா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!
Next articleமேஷம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை