சீனாவின் சொர்க்க அரண்மனை கடலில் விழுந்து நொருங்கியது!!

0
286

சீனாவின் டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையம் தென்பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.

சீனா 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, நிறுவியது.

இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ஆகும். இந்த விண்வெளி மையம் தனது முக்கியப்பணிகளை 2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘டியான்காங்-1’ தனது பணிகளை முடித்துக்கொண்டு செயலற்றுப்போய் விட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது.

இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

இந்த நிலையில், விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசுபிக் பகுதியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பெரும்பாலானவை அழிந்துவிட்டதாகவும் தெரிவித்து உள்ளனர். தெற்கு பசுபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியை நோக்கி வருவதால், விண்வெளி ஆய்வுக்கூடம் விழுவதால் பாதிப்பு பெரிய அளவு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பசுபிக் பெருங்கடலில் விண்வெளி நிலையம் விழுந்துள்ளது.கடலில் விழுந்தவை விண்வெளி நிலையத்தில் என்ஜின் பாகங்கள் என கூறப்படுகிறது. இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: