சிறு நீரக கற்கள் உருவாகாமல் தடுத்து உருவாகிய கற்களை கரையச் செய்யும் ஆற்றல் கொண்ட சிட்ரஸ் பழங்கள்!

0
513

சிறு நீரக கற்கள் என்பது பல்வேறு மினரல்கள் கலந்து கரைய முடியாத சிறு சிறு கல்லாய் மாறிவிடும். இவை சிறு நீரில் வெளியேற முடியாமல் அடைத்து தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.

பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலெட் என்ற தாதுதான் சிறு நீர்கற்களாய் உடலில் தோன்றும். சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறு நீரகக் கற்கள் உருவாகும்.

சிறு நீரக கற்கள் உருவாகும் ஆபத்தில் இருப்பவர்கள் கீரைகள், ஆக்ஸலேட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் அதிகமாக நீர் அருந்துதல் மிகமுக்கியம்.

சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் அவ்வாறு உருவாகிய கற்களை கரையச் செய்யும் ஆற்றல் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

சிட்ரஸ் பழங்களிலுள்ள ஹைட்ராக்ஸி சிட்ரேட் என்ற பொருள் சிறு நீரக கற்கள் உருவாக காரணமான கால்சியம் ஆக்ஸலேட்டை கரையச் செய்யும் என அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக சிறு நீரக் கற்கள் உள்ள நோயாளிகளுக்கு சிட்ரேட் எனப்படும் மாத்திரைகளை தருவார்கள். அவை சில நோய்காளிகளுக்கு பக்க விளைவுகளை தருவதால், அவற்றிற்கு பதிலாக பழங்களில் காணப்படும் ஹைட்ராக்ஸி சிட்ரேட் தருவது நல்லது. ஹைட்ராக்ஸி சிட்ரேட் தெரபியாகவும் நோயாளிகளுக்கு கொடுக்கலாம். இது மாத்திரை வடிவத்தில் எடுத்துக் கொள்வதால் வேகமாக பலன் தரும்.

சிட்ரேட் மாத்திரைகளையும் ஹைட்ராக்ஸி சிட்ரேட் சப்ளிமென்டியையும் ஒப்பிட்டு பார்த்ததில், ஹைட்ராக்ஸி சிட்ரேட் மிகவும் அதிக பலனை தருகிறது எனவும் கூரியிருக்கின்றனர்.

ஒரு 7 சிறு நீரக கற்கள் உள்ள நோயாளிகளுக்கு இந்த ஹைட்ராக்ஸி சிட்ரேட் தொடர்ந்து 3 நாட்களுக்கு சப்ளிமென்ட்ரியாக கொடுத்தனர். கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறியது ஆய்வில் தெரிய வந்தது.

ஆகவே சிட்ரஸ் பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வலிமிகுந்த சிறு நீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம். வந்தபின்னும் அதனை கரையச் செய்யும் ஆற்றல் இந்த சிட்ரஸ் உணவுகளுக்கு உண்டு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: