சிறுமி திருமண விவகாரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை!

0
577

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அழுகிய நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் ஒருவரை மட்டுமே பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர். எஞ்சியவர்கள் மாநிலத்தை விட்டே தலைமறைவாகியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ராம் சிங் சிர்க்கா(45) என்பவரின் 17 வயது மகளை திருமணம் செய்து தரும்படி ஏற்கெனவே திருமணமான நபர் ஒருவர் நிர்பந்தித்து வந்துள்ளார்.

அந்த நபரும் அவரது குடும்பமும் அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என கூறப்படுகிறது.

ஆனால் தமது மகளை ஏற்கெனவே திருமணமான நபருக்கு மறுமணம் செய்து வைக்க ராம் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் ராம் சிங் குடும்பத்தை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி ராம் சிங் வெளியூர் சென்ற நிலையில் அவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த 9 பேர் கொண்ட கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் அங்கிருந்த ராம் சிங்கின் மனைவி, அவரது மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளிட்ட 4 பேரை கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் உடல்களை மறைவு செய்துள்ளனர். இந்த நிலையில் வீடு திரும்பிய ராம் சிங்கையும் அவர்கள் கொடூரமாக தாக்கி அதே வனப்பகுதியில் புதைத்துள்ளனர்.

இதனிடையே மார்ச் மாதம் 27 ஆம் திகதி 4 சடலங்களை வனப்பகுதியில் இருந்து மீட்ட பொலிசார், இதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சிறுமியை திருமணம் செய்து தர மறுப்பு தெரிவித்த காரணத்தாலையே இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகியுள்ள நிலையில் எஞ்சிய 8 பேரை பொலிசார் தீவிரமாக தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு முக்கிய அறிவித்தல்!
Next articleரிஷப ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!