சிறுமி ஆஷிபாவுக்கு நடந்த கொடுமை: மேடையில் கண்ணீர் விட்ட நடிகர் சத்யராஜ்!

0
355

ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பேசுகையில் நடிகர் சத்யராஜ் அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, ஆஷிபா குறித்து மேடையில் பேசுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அச்சிறுமியின் பெயரை சொன்னவுடன், அவரால் மேற்கொண்டு பேச இயலவில்லை.

கண்ணீரை துடைத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: