சிறுமியையும் விட்டு வைக்காத திருநாவுக்கரசு! பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முதன் முறையாக வெளியிட்ட ஆடியோ!

0

தமிழகத்தில் இளம் பெண்களை சீரழித்த திருநாவுக்கரசின் வீட்டின் பின்புற சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக இளம் பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது.

இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்து அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அந்த பெண் திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவர், அவர் வீட்டின் பின்புற சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமிடம் நெருக்கமாக இருந்ததால், அவள் இறந்துவிட்டாள் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரஜினிகாந்த் பெற்றோரின் மணிமண்டபம் திருச்சியில் திறப்பு!
Next articleநான் பொறுமையாக இருக்கமாட்டேன்! போய் அடித்துவிடுவேன்! நயன்தாரா விசயத்தில் பொங்கிய சர்ச்சை நடிகை!