சிறுமிக்கு கொடுத்த அன்பு பரிசு! குழந்தையாக மாறிய ஜனாதிபதி!

0
213

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.

சிறுவர் மன ஓவியங்கள் என்ற தொனிப்பொருளில் சித்திர கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் நேற்று ஆரம்பமானது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியை சிறுவர்கள் அன்புடன் வரவேற்றனர். சிறுவர்களுடன் ஜனாதிபதி அன்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார்.

அங்கு விசேட திறமைகளை வெளிக்காட்டிய சிறுவர்களுக்கு, ஜனாதிபதி சான்றிதழ்கள் வழங்கினார்.

அத்துடன் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சிறுமிக்கு மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: