சிறுநீர்த் தொற்றினால் உண்டாகும் கடுமையான வலியை விரைவில் போக்க !

0
625

சிறு நீர்த் தொற்று ஆண் பெண் இருபாலருக்குமே உண்டாகக் கூடிய தொற்று நோய். குறிப்பாக பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும். ஆண்களுக்கு அரிதாக என்றாலும் இதனால் தாங்க முடியாத வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.

சிறு நீரக உறுப்புக்களை சரிவர சுத்தம் செய்யாவிட்டால் அல்லது நீர் குறைவாக குடிக்கும்போது இந்த நிலை உண்டாகிறது. அதிக நீர் குடித்தாலே குணமாகிவிடும்.

ஆனால் தீவிர தொற்று இருந்தால் காய்ச்சல் உடல் சோர்வு மற்றும் எரிச்சல் உண்டாகும். இந்த சமயத்தில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஒரு மூலிகை வைத்தியத்தை உபயோகித்துப் பாருங்கள். சிறு நீர்த் தொற்று கட்டுப்படும்.

தாமரை இலை :


கிருமித் தொற்று, சுகாதார குறைவு மற்றும் அதிக உடல் சூட்டினால் தோன்றும் வெள்ளைப்படுதலை நீக்கும் அற்புத மூலிகை ஓரிலை தாமரை. இதன் இலைகள் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன.

இதன் இலைகளிலுள்ள பச்சையங்கள் மற்றும் ஈரப்பதம் குளிர்ச்சியை உண்டாக்கி, உணவுப்பாதை மற்றும் சிறுநீர்பாதை புண்களை ஆற்றுகின்றன.

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை நீக்குகின்றன.

5 இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். கால் லிட்டல் அளவிற்கு சுண்டியபின்பு வடிகட்டிக் கொள்ளுங்கள்.

இந்த நீரை காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்தால் கிருமித் தொற்றுகள் நீங்கி, உடல் சூடு தணியும்.

ஓரிலை தாமரை, நீர்முள்ளித் தண்டு, வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5 கிராமளவு தினமும் 2 வேளை இளநீர் அல்லது மோருடன் கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தொல்லை நீங்கும்.

ஓரிலைத் தாமரை இலைச்சாறு, பாதாம்பிசின் பொடி இரண்டையும் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து குடித்து வர உடல் உஷ்ணம் குறைந்து, பல வகைப்பட்ட சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீரக கற்களை கரைக்க கரும்புச் சாறுடன் “இவை இரண்டையும்” கலந்து குடிங்க..!
Next articleஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!