சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்!

0
439

அண்மைய ஆய்வொன்று இதயத்தின் தன்மையானது சிறுநீரகத்தின் தன்மையை பாதிப்பதாக சொல்கிறது.

அதாவது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புபட்ட குருதியமுக்கம், கொலஸ்திரோல், குருதி வெல்லம், உணவு முறை, உடல் நிறை, புகைப்பிடித்தல், உடற்பயிற்சி போன்றன சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

இவ் ஆய்வில் 45 – 64 வயதுக்கிடைப்பட்ட 14 932 ஆண், பெண் இருபாலினரும் சோதிக்கப்பட்டிருந்தனர்.

மேற்படி 7 வகை பரிசோதனை முடிவுகளும் சீர், நடுநிலை, மோசம் மற்றும் சிறுநீரக நோய்களை தோற்றுவிக்கக் கூடியன என வகைப்படுத்தப்பட்டன.

முடிவுகளிலிருந்து சீரான தன்மைகள் சிறுநீரக நோயை தோற்றுவிக்கும் சாத்தியப்பாடு குறைவாக இருந்தமை அறியப்பட்டது.

சீரற்ற தன்மைகளை கொண்டவர்களில் 33 வீதம் சிறுநீரக நோய்கள் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

பொதுவாக மனித உடற் பாகங்கள் ஒரு வலையமைப்பு போன்றது.

இதழல் ஒரு அங்கத்தில் ஏற்படும் பாதிப்பு ஏனைய அங்கங்களையும் பாதிக்கின்றன என்பதே உண்மை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: