சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0

சிம்மம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை

உங்களின் பூர்வபுண்ணிய வீடான 5-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை சிரமப் படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் அதிரடி யோகங்களைத் தருவார். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். கரடுமுரடாகப் பேசிய கணவர் இனி பாசமாகப் பழகுவார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உறவினர்களிடம் நிலவிய ஈகோ பிரச்னை நீங்கும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் மறைமுகமாகத் தொல்லை கொடுத்தவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். இந்த சனி மாற்றம் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !
Next articleகன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !