சின்மயி _ வைரமுத்து மோசமானவர்னு தெரிந்தும் மேடையில் புகழ்ந்து பேசியது ஏன்?

0
725

திரையுலகினர் மீது திடீர் திடீரென பாலியல் குற்றங்களை எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சுமத்துவது இப்போது ஒரு பேஷனாகிவிட்டது. ஹாலிவுட்டில் ஆரம்பித்த இந்த டிரெண்ட் ஸ்ரீரெட்டி வரை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு பெண்கள் பாலியல் புகார் கூற, அதனை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் ரீடுவீட் செய்துள்ளார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைரமுத்து மீதான குற்றச்சாட்டை உண்மை என்று சின்யி கூறியுள்ளார்.

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இது நடந்தது 2005ல் என்று கூறியுள்ளார். ஆனால் 2010ஆம் ஆண்டில் வைரமுத்துவையும் அவரது குடும்பத்தினர்களையும் புகழ்ந்து பல டுவீட்டுக்களை சின்மயி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதேபோல் வைரமுத்துவின் மகன் கார்க்கியின் மனைவி தனக்கு நெருங்கி நண்பர் என்றும் சின்மயி டுவீட் செய்துள்ளார். 2005ல் வைரமுத்து மோசமானவர் என்று தெரிந்தும், 2010ல் அவரது குடும்பத்தினர்களை பாராட்டியது ஏன்? என்று சின்மயியை நோக்கி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சின்மயி தன்னுடைய திருமணத்தில் கலந்து கொண்ட வைரமுத்துவிடம் காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

2014ஆம் ஆண்டு நடந்த திருமணத்தின்போது காலில் விழுந்து ஆசி பெற்றது முரண்பாடாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தவர் என்று தெரிந்தும் காலில் விழுந்து ஆசி வாங்கியது ஏன்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். இதற்கு சின்மயி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: