சின்னத்திரை நடிகையை பாலியல் தொழிலுக்கு அழைத்த இருவர் கைது- அவர்களின் புகைப்படம் இதோ!

0
584

சினிமாவில் நடிகைகள் பல பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். ஒரு சிலர் தைரியமாக வெளியே கூறுகிறார்கள், அப்படி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தற்போது போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசேஜ் வந்துள்ளது.

அதில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகைகள் சிலரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுத்த ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் அதே மெசேஜை தனித்தனியாக அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நடிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் தற்போது இருவரை கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: