கருவில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையை என்பதை கண்டறிய அகத்தியர் கூறிய முறை !

0
8891

ஒரு கரு உருவான கணத்தில் இருந்து ஒரு பெண் தாயாக மாறுகிறாள். அவளுக்குள் இனம் புரியாத பல மாற்றங்கள் ஏற்பட துவங்குகிறது. அந்த கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிய தாயும் தந்தையும் ஆர்வம் கொள்கின்றனர். அந்த ஆர்வத்திற்கான ஒரு விடையை சித்தர்கள் அருளியுள்ளார். கருவில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையை என்பதை கண்டறிய சித்தர்கள் கூறிய சில அறிய செயல்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

அறிவியல் முன்னேற்றம் நிறைந்த இக்காலத்தில் ஸ்கேன் மூலம் கருவின் பாலினத்தை கண்டறிய வாய்ப்புண்டு. இந்திய திருநாட்டில் அது தடை செய்யப்பட்ட ஒன்று என்றாலும் வெளிநாட்டில் ஸ்கேன் மூலம் கருவின் பாலினத்தை அறிவது வழக்கம். அப்படி கருவின் பாலினத்தை அறிவதற்கு பெற்றோர்கள் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்திலேயே கருவின் பாலினத்தை கணிக்கும் முறையை அகத்தியர் அருளியுள்ளார்.

“கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை”
– அகத்தியர் –

கரு உண்டான காலத்தில் நாசியிலே ஓடுகின்ற சரம் அல்லது மூச்சுக் காற்றினை வைத்து கெர்ப்பத்தில் உதித்தது ஆணா , பெண்ணா என்பதை அறிந்திடும் முறையினை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

பிராண வாயு என்னும் மூச்சுக்காற்று வலது நாசியில் ஓடினால் கெர்ப்பத்திலிருப்பது பெண் குழந்தை எனவும், மூச்சுக் காற்றானது இடது நாசியில் ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மூச்சு காற்றோட்டமானது சீராக முழுமையாக இல்லாதிருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்கிறார்.

புலிப்பாணி சித்தர் தன்னுடைய பாடல் ஒன்றில் குழந்தை பிறக்கும் நாளை கணிக்கும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

“சித்திரை பத்தாந் தேதியில் தூரம்
சென்றிடிலது முதற்பத்து வரையில்
பத்தாகு மதிலேழு சேரில் பதினேழ் தேதியில்
பகர்தறி தைமாதம் பதினேழ் தேதியிலே
ஆமாப்பா போகருட கடாட்சத்தாலே
தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே”
– புலிப்பாணி –

சித்திரை மாதம் பத்தாம் தேதியில் வீட்டுவிலக்கு நின்று விட்டால் அது முதல் பத்து மாதங்களை கணக்கு வைத்தால் தை மாதம் பத்து மாதமாகும், அந்த மாதத்தில் எழு நாட்களை சேர்த்துக் கொண்டால் தைமாதம் பதினேழாம் திகதி பிரசவிப்பாள்.

சித்திரை மாதம் பதினைந்து தேதிக்கு முன்னதாக மாதவிலக்கு நிற்கிறவர்களுக்கு பத்து மாதக் கணக்காகும். சித்திரை பதினைந்தாம் தேதிக்கு மேல் மாத விலக்கு நிற்கிறவர்களுக்கு பதினோரு மாதம் என்கின்ற கணக்கில் பார்க்கவேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர். கருவுற்ற காலத்தில், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி சித்தர்கள் அருளியதை அடுத்த பதிவில் காண்போம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபழைய புகைப்படத்தை பகிர்ந்த பிக் பாஸ் அனுயா, உள்ளாடை தெரியும்படி போஸ்!
Next articleதாது விருத்தி – கானா வாழை, தூதுவ‌ளை, முருங்கைப்பூ, பால் மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள்.