சித்தர்களால் சொல்லப்பட்ட சில பயனுள்ள எளிய பரிகார முறைகள்!

0
3254

ஆரம்பகாலத்திலிருந்தே இந்துசமய சாஸ்த்திர சம்பிரதாயங்கள் மனித வாழ்வோடு ஒன்றாக கலந்தவை, இருப்பினும் தற்காலம் வரை இந்து சமயத்தவர்களை அதை கடைப்பிடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.இதில் கீழே சில சித்தர்கள் கடைப்பிடித்த ஆன்மீக தகவல்களை பார்ப்போம்.

அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: