சிங்கள மற்றும் தமிழர் தரப்பு எதிர் எதிர் கூட்டங்கள்! சூடு பிடிக்கும் ஜெனீவா களம்!

0
266

ஜெனீவாவில முகாமிட்டுள்ள தமிழர்களும், சிங்களவர்களும் எதிர்எதிர் கூட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் நடாத்தி வருகின்றனர்.

கடந்த 10ம் திகதி தொடங்கியிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ம் திகதி நிறைவடைய இருக்கின்றது.

இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிவடைய இன்னும் 5ம் மாதங்கள் உள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை அங்கத்துவ நாடுகள் இவ்விடயத்தில் எத்தகைய நகர்வினை வரும் மார்ச் அமர்வின் போது எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு காண்படுகின்றது.

இந்நிலையில் ஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பு, இலங்கை விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடங்களில் கூட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இதற்கு சமாந்திரமாக மனித உரிமைச்சபையில் முகாமிட்டுள்ள சிங்களவர்ளும் சமாதானம், பயங்கரவாதம் எனும் தொனிப்பொருளில் எதிர்கூட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

சர்வதேசத்தினால் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே ஐ.நா மனித உரிமைச்சபையில் தமிழர் தரப்பாக உள்ளனர் என்றும், விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியவர்களாக இருக்கின்ற இப்புலம்பெயர் தமிழர்களை ஐ.நாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சிறிலங்கா பௌத்த சங்க பிரதிநிதிகள் கூட்டமொன்றில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போர்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இலங்கை படைத்தரப்பைச் சேர்ந்தவர்களே, தங்களின் போர்குற்றங்களை மூடிமறைக்க ஜெனீவாவில் வந்து வாதாடி வருகின்றனர் தமிழர் தரப்பு எதிர்குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: