சிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் கடைசி ஜமீன் முருகதாஸ் அவர்கள் உடல்நலம் குறைவால் இயற்கை மர(ண)ம் அடைந்துள்ளார்..!

0
130

மதிப்பிற்கூறிய சிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் கடைசி ஜமீன் திரு டி.என்.எஸ். முருகதாஸ் அவர்கள் தனது 89வது வயதில் உடல்நலம் குறைவால் இயற்கை மர(ண)ம் அடைந்துள்ளார்.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் சீமராஜா. இப்படத்தில் வரும் சிங்கம்பட்டி சீமராஜா கதாபாத்திரம் உண்மையானது என்பதனை நாம் அறிவோம்.

இந்த வகையில் இன்று காலை சிங்கம்பட்டி ஜமிந்தார் அவர்கள் காலமான செய்தியை அறிந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா! அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அ(னு)தாபங்கள்’ என்று கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: