சிங்கத்துடன் நேருக்கு நேர் மோதிய நபர்! செம டிவிஸ்டில் கிளைமாக்ஸ்!

0

மேற்கு அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் சிங்கத்துடன் நேருக்கு நேர் மோதி அதனை கொன்றுள்ளார்.

மேற்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கொலராடோ மலைப்பகுதியில் வாலிபர் ஒருவர் ஜாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவரை அமைதியாக பின்தொடந்த சிங்கம் ஒன்று அவரை பின்னால் இருந்து தாக்கியது.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த வாலிபர் நிலைகுலைந்து போனார். அந்த வாலிபரின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ரத்தம் வழிந்தது. ஆனாலும் மனம் தளராத வாலிபர் அந்த சிங்கத்துடன் சண்டையிட்டார். கடைசியில் அந்த சிங்கத்தை கொன்றே விட்டார்.

இதனையடுத்து படுகாயமடைந்த அந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடல் பச்சை நிறமாக மாறபோகும் அபாயம்! எதனால் தெரியுமா! ஆராய்ச்சியாளர்களின் பகீர் தகவல்!
Next articleசிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுவதற்கு நாம் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் காரணம் என்று தெரியுமா!