சிக்கலில் சிக்கிய ‘சிவோக்கி’யின் திரைப்படம் – ‘ஹீரோ’வாக திரை காணுமா?

0

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அர்ஜுன் மிக முக்கிய வேடம் ஏற்க விரைவில் வெளியாகவிருந்த திரைப்படம் “ஹீரோ”.

அரசியல் கலந்த த்ரில்லர் கலவையாக இந்தப் படத்தின் கதை பின்னப்பட்டிருக்கும் நிலையில், நத்தார் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ம் திகதி கட்டாயம் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் சிவோக்கி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்க, படத்தின் தலைப்பினால் சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளது “ஹீரோ”.

இந்த சிக்கல் நிலை தொடர்பில் Triple Arts திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எம்.மணிகண்டன் என்பவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள விளக்கமானது, “நான் ‘Triple Arts’ நிறுவனம் சார்பில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017 அன்று “ஹீரோ” என்ற படத் தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து முறையாக புதுப்பித்து 03.06.2020 வரை அந்தப் பெயருக்கான உரிமம் பெற்றுள்ளேன்.

“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆமந்த் அண்ணாமலையின் எழுத்து- இயக்கத்தில், தெலுங்கு நடிக்காரனான விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான செய்திகள் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் தமிழ் மொழியில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனமானது, அதே “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர். இது தொடர்பில் நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டிருந்தோம்.

எமது முறைபாட்டைத் தொடர்ந்து, எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப் பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டு, கவுரவ செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி அனுப்பி வைத்ததுடன், அதன் பிரதியை எங்களுக்கும் கொடுத்தனர்.

இருந்தும், KJR STUDIOS தயாரிப்பு நிறுவனமானது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் என்பவற்றை மீறி கடந்த மாதம் 2ம் திகதி பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தினர். அதன் காரணமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் கடிதத்தை மூலமாக வைத்து KJR STUDIOS தயாரிப்பு நிறுவனத்திற்கு எமது வழக்கறிஞர் மூலம் உத்தரவு அறிவித்தல் அனுப்பியுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபல நாடுகளில் வெளியிடப்பட்ட மஹாத்மா காந்தியின் தபால் தலை!
Next articleபிரியா பவானி ஷங்கர் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி !