Home thatstamil one india tamil oneindia tamil சாவை நெருங்கும் நபர் கண்ணீல் ஒரு துளி பயமில்லாமல் அம்மாவிற்கு வெளியிட்ட காணொளி!

சாவை நெருங்கும் நபர் கண்ணீல் ஒரு துளி பயமில்லாமல் அம்மாவிற்கு வெளியிட்ட காணொளி!

0
466

‘அம்மா, நான் உங்களை நேசிக்கிறேன். என் மரணத்தைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்’ நக்சல் தாக்குதலின்போது தூர்தர்ஷன் ஊழியர் பதிவுசெய்த உருக்கமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நக்சல் தாக்குதல்
சத்தீஸ்கரில் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க தூர்தர்ஷன் செய்தியாளர்கள் குழு தந்தேவாடா மாவட்டத்துக்கு விரைந்தது.

ஒரு செய்தியாளர், கேமராமேன், லைட்டிங் உதவியாளர்கள் மற்றும் அவர்களுடன் காவல் துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர். அப்போது திடீரென நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்த சாஹீ மற்றும் இரண்டு காவல் துறையினர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின்போது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த செய்தியாளர் மற்றும் லைட்டிங் உதவியாளர் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். 45 நிமிடம் நீடித்த இந்தத் தாக்குதல்குறித்து செய்தியாளர் பரபரப்பு பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில், லைட்டிங் உதவியாளர் ஷர்மா, தான் பதிவுசெய்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஷர்மா கீழே விழுந்துக்கிடக்கிறார்.

நாங்கள் தேர்தல் தொடர்பாகச் செய்தி சேகரிக்க சாலை மார்க்கமாகத் தந்தேவாடா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தோம். எங்களுடன் காவல் துறை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். திடீரென நக்சல்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டனர். அம்மா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். இந்தத் தாக்குதலில் ஒருவேளை நான் உயிரிழக்கக்கூடும். நான் மரணத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு பயமாக இல்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உயிர் பிழைப்பேன் என எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களுடன் சில பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். எல்லா பக்கமும் நக்சல்கள் எங்களைச் சூழ்ந்துள்ளனர்” எனப் பேசியுள்ளார்.

Previous articleபகீர் கிளப்பும் பிரித்தானிய பெண்மணி! 20 ஆவிகளுடன் பாலியல் உறவு… ஆவியுடனே திருமணம்!
Next articleநவம்பர் மாத ராசி பலன்! யாருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது?