சாவகச்சேரியில் சிக்கிய நபர் யார்? யாழில் தனியாக செல்லும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து!

0
184

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தனியாக பயணித்த பெண்ணின் கைப்பையை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டு அமைய நேற்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சில காலமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தனியாக பயணிக்கும் பெண்களை இலக்கு வைத்து குறித்த பெண்களின் பணப்பையை திருடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 18 கையடக்க தொலைபேசிகள், 19000 ரூபா பணம், பெண்களில் 4 கைப்பைகள் மோட்டார் சைக்கிள்கள் 2 இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: