சாண்டியின் முன்னாள் மனைவி காஜலுக்கு திருமணத்திற்கு பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாக சமூகவலைத்தளத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.
இது குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் காஜலிடம் பேசியுள்ளார். எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன்.
இதை பற்றி நான் பல முறை கூறியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை அதை நினைத்து நான் வருத்தப்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லவ் டார்ச்சர் தான் அவரை பிரிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார்.
எப்போதும் நான் அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் என்றும் கூறியிருந்தார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக சாண்டியின் குடும்பத்தினரை சந்தித்த காஜல் அப்போது எடுத்துக்கொண்ட புகைபடத்தை கூட தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு காஜல் சென்றுள்ளார். இந்த விழாவில் சாண்டி மற்றும் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கமலுடன் காஜல் புகைப்படம் ஒன்றை எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்த சாண்டிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.