சவுதி பெண்கள்! பூப்படைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொள்ளும் நிலைமை!

0
383

பூப்படைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொள்ளும் சவுதி பெண்கள்!

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சவுதியில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன.

முழுக்க முழுக்க ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவர்களுக்கு சமீபத்தில் தான் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்பெண்கள் என்னதான் படித்திருந்தாலும், வெளியில் சென்று வேலை பார்ப்பதற்கு அதிகளவில் அனுமதி கிடையாது.

சுமார், 17 சதவீதம் பெண்கள் தான் பணிக்கு செல்கிறார்கள். அப்படி சென்றாலும் அதிக நேரம் வேலை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி இவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டுமென்றால் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் அனுமதி வாங்க வேண்டும்.

அந்நாட்டு பெண்கள் வீட்டினை மற்றும் குழந்தைகளை பராமரித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால், பணிக்கு செல்வதில்லை.

அப்படி, பணிக்கு சென்றாலும் ஆண்களுக்கு வழங்கும் ஊதியத்தினை விட குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் போனஸ் போன்றவை வழங்கப்படமாட்டாது.

மேலும் அலுவங்களில் பெண்களுக்கு மட்டும் தனியாக இடங்கள் மற்றும் கழிவறைகள் ஒதுக்க வேண்டும் என்பதால், அதற்கான பணம் இப்பெண்களிடம் இருந்தே வசூலிக்கப்படுகிறது.

மேலும், காதல் திருமணம் செய்துகொள்வதற்கு பெண்களுக்கு உரிமையில்லை. இளம் வயதிலேயே பெண்கள் திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்வதால் குழந்தை பேறு போன்றவற்றால் பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறப்பினை சந்திக்கின்றனர்.

அதிலும், குறிப்பாக சில பெண்கள் பூப்படைவதற்கு முன்னரே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: