சவாரி செய்ய வரும் நபர்களை கண்டால் மயக்கம் வருவதுபோல் நடிக்கும் குதிரை.. வைரல் காட்சி!

0

குதிரை ஒன்று சவாரி செய்ய யாரவது வந்தால் மயக்கம் வருவதுபோல நடித்து தரையில் விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உயிர்போனால் எப்படி தரையில் படுத்திருக்குமோ, அதே போன்று அந்தக் குதிரை படுத்துக் கொள்கிறது. சவாரி செய்ய வந்தவர் திரும்பிச் சென்றதும் குதிரை துள்ளி எழுந்து விடுகிறது.

இந்த சுட்டிக் குதிரை செய்யும் சேட்டைதான் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கிறது குதிரையின் வீடியோ.

பேஸ்புக்கில் பிராசிஸ்கோ ஜலாசர் (Frasisco Zalasar)என்பவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். குதிரைக்கு ‘ஜிங்ஜாங்’ (Jingang) என்று பெயர் வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் அதன் மீது ஏற வரும்போது மயங்கி விழுந்து விடுகிறது. சில சமயம் தொட்டாலே மயக்கம்போட்டு விழுகிறது ஜிங்ஜாங்.

தரையில் படுத்துக் கொண்டு நாக்கை வெளியே நீட்டி இறந்ததுபோல் நடிக்கும் ஜிங்ஜாங்கின் சேட்டை, படு சுட்டித்தனமாக உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல நடிகை ராகவியின் கணவர் திடீர் தற்கொலை!
Next articleநகைகளை சாப்பிட்ட மாடு… எப்போது சாணம் போடும் என ஆவலாக காத்திருக்கும் குடும்பம் !