சவப்பெட்டியில் சுர்ஜித்தின் உடல் !.. விரைவில் நல்லடக்கம் !

0

மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சுர்ஜித்தின் உடல் நேரடியாக கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான போராட்டம் 80 மணிநேரமாக நடந்தும் தோல்வியில் முடிந்தது.

குழந்தையின் உடலை அழுகிய நிலையில் தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்டனர், அங்கிருந்து நேரடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்தத பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுர்ஜித்தை நானே காப்பாத்தி இருப்பேன் அதற்கு இவர்கள் என்னை விடல! சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்.
Next articleசுர்ஜித்தின் உடல் சற்றுமுன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.தம்பி மறைவால் செய்வதறியாது தவிக்கும் சுர்ஜித் அண்ணன் மனதை உலுக்கும் புகைப்படம்!