சர்ச்சையை ஏற்படுத்திய பெண்களின் தகவல்கள் அம்பலம்! இலங்கை கிரிக்கெட் வீரரின் நண்பரின் உல்லாசம்!

0
604

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவின் நண்பர் ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டிருந்தது.

நேர்வே நாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் தொடர்பான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் நண்பர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் அவரது நண்பருக்கு எதிராக முறைப்பாடு செய்த நோர்வே நாட்டு பெண்கள் இருவரின் புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அவர்கள் இருவரும் ஹேய்ஸ் பர்ஜி பெகென்சின் மற்றும் சில்ஜே நைலென்ட் என்ற பெயருடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 15ஆம் திகதி குறித்த இருவரும் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.

குறித்த பெண்கள் தனுஷ்க குணதிலக்கவுடன் பேஸ்புக் ஊடாக நண்பர்களாகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள கொழும்பு ஹோட்டலுக்கு வருமாறு குறித்த இருவருக்கும் அறிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் அவரது நண்பர் அந்த பெண்களை அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான பானங்களை வழங்குவதற்கு அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலை, குறித்த பெண்கள் ஹோட்டலில் நடமாடும் காட்சி அங்கிருந்த சிசிடீவியில் பதிவாகியுள்ளது.

தனுஷ்க குணதிலக்க மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், விசாரணையின் பின்னர் அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: