சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ இந்த 9 வழிகளை பின்பற்றுங்க.!

0
1304

தற்போதைய காலத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லாரிடத்திலும் காணப்படுகிறது. இதை அடிக்கடி கேட்கப்படும் ஒரு விஷயமாகவும் மாறி வருகிறது. இப்படி எல்லாரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா? இல்லை இப்பொழுது உள்ள அவசர வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை எல்லாம் மாறி வருகிறது. இதுவும் ஒரு காரணம் தான்.

ஒரு ஆராய்ச்சி அறிக்கை என்ன சொல்கிறது என்றால் 1980-ல் 108 மில்லியன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தற்போது 2014-ன் கணக்குப்படி பார்த்தால் 422 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னமும் நிறைய பேர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்போ கொஞ்சம் யோசித்து பாருங்கள் வரும் காலத்தில் எவ்வளவு பேர் இதனால் பாதிப்படைந்து இருப்பர்.

நமக்கு தெரியும் நீரிழிவு என்பது ஒரு மெட்டாபாலிசநோய். நமது உடல் போதுமான இன்சுலினை சுரக்க முடியாமல் சர்க்கரையானது இரத்தத்தில் கலப்பதால் அதன் அளவு அதிகரித்து வருவது தான் இந்த நீரிழிவு. உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உங்களுக்கு ஏகப்பட்ட அறிகுறிகள் தென்படும். சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காயங்கள் மெதுவாக ஆறுதல் போன்றவை ஏற்படும்.

இதில் பெரும் கொடுமை என்னவென்றால் இந்த பிரச்சனையை நீங்கள் குணப்படுத்த முடியாது ஆனால் கட்டுப்படுத்தலாம். சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படவில்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. இதற்கு காரணம் அவர்களின் குடும்ப பழக்கவழக்கங்கள், உணவு முறை போன்றவை தான். நீரிழிவு வராமல் தடுப்பதற்கான சில வாழ்க்கை முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உங்களுக்கு தெரியும் நமது உடல் குறியீட்டு எண்ணை சரியான அளவில் வைத்து இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது. நீங்கள் நீரிழிவு மற்றும் பிற நோய்களிலிருந்து தப்பிக்க ஓரே வழி உங்கள் உடல் எடையை சரியான அளவில் பேண வேண்டும். நீங்கள் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்து வந்தால் உங்கள் உடல் எடை குறியீட்டு எண்ணையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நீரிழிவு வருவதை 70% வரை தடுக்கலாம்.

சாலட் ஒரு மிகச்சிறந்த உணவாகும். அதிலும் காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்கள் அடங்கிய சாலட் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இதில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கீரை மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து கொள்ளுங்கள். மதிய உணவிற்கு முன் அல்லது இரவு உணவில் முன் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மேலும் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்க்க மறந்து விடாதீர்கள். வினிகர் சேர்ப்பதால் உணவிலிருந்து உறிஞ்சப்படும் சர்க்கரை அளவு குறையும் இதனால் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சேராமல் நீரழிவு வருவது தடுக்கப்படும்.

உடற்பயிற்சி என்பது நமது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுதோடு ஆரோக்கியமாக வைத்து இருக்கவும் உதவுகிறது. எனவே நீங்கள் நீரிழிவிலிருந்து தப்பிக்க உடற்பயிற்சி மேற்கொள்வது உங்களுக்கு சிறந்த பலன் அளிக்கும். எனவே தினசரி 40 நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். இதனால் உங்கள் மெட்டாபாலிசம் அதிகரித்து இன்சுலின் அளவை சரியாக்கி நீரிழிவு வருவதை தடுக்கிறது.

உங்கள் உணவில் முழுதானிய உணவுகளான ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, சிறு தானியங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் காலை உணவிற்கு இது சிறந்ததாக இருக்கும். இந்த முழு தானியங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இந்த நார்ச்சத்துகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து நீரிழிவு வருவதை தடுக்கிறது. மேலும் மலச்சிக்கல், இரத்த அழுத்தம் போன்றவற்றையும் சரிசெய்கிறது.

காபி குடிப்பது உடலுக்கு நல்லதா இல்லையா என்பது பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதன் படி பார்த்தால் ஒரு நாளைக்கு 2 கப் காபி குடித்து வந்தால் டைப் 2 நீரிழிவு வருவதை தடுக்கலாம் என்று கூறுகிறது. கிட்டத்தட்ட 29% வருவதை தடுக்கலாம். இருப்பினும் சர்க்கரை இல்லாத காபி அருந்துங்கள். அது இன்னும் சிறந்தது. காபிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமக்கு இந்த நன்மைகளை அளிக்கிறது.

இந்த நவீன காலத்தில் டேஸ்டியான நிறைய வகையான ஃபாஸ்ட் ஃபுட் கள் கிடைக்கின்றன. அதை தவிர்ப்பது நமக்கு கடினமாக இருந்தாலும் தவிர்த்து கொள்வது நல்லது. ப்ரைஸ், பீட்சா, பர்கர்ஸ் போன்றவற்றை தவிருங்கள். இதனால் உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், சீரண சக்தி பிரச்சனைகள் போன்றவைகள் நம்மை தொற்றி கொள்கின்றன. இந்த மாதிரியான உணவுகள் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து, நீரிழிவு வர காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே இந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு வருவதை தடுக்கலாம்.

அதிகளவில் பட்டையை பொடியாகவோ அல்லது பட்டை எண்ணெயாகவோ உங்கள் உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு வருவதை 48% வரை தடுக்கலாம். இந்த பட்டை உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து மற்றும் ட்ரைகிளிசரைடு போன்றவற்றையும் குறைக்கிறது. இந்த இரண்டு பொருட்களும் இயற்கையாகவே குறைக்கப்படும் போது இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

மன அழுத்தம் தான் எல்லா விதமான நோய்க்கும் காரணமாகும். சின்ன தலைவலியிலிருந்து ஆளைக் கொல்லும் புற்றுநோய் வரை அனைத்தும் இதனால் தான் ஏற்படுகிறது. எனவே உங்கள் மன அழுத்தம் உங்களுக்கு சர்க்கரை நோயையும் கொண்டு வந்து விடும். எனவே முதலில் உங்களை அமைதியாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றை செய்து மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் கார்டிசோல் மன அழுத்த ஹார்மோனும் குறைந்து நீரிழிவு இல்லாமல் நீண்ட காலம் நாம் வாழலாம்.

மன அழுத்தத்தை போலவே நம்மை அதிகளவில் கொல்லும் விஷயம் இந்த புகைப்பழக்கம். புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் மட்டும் வருவது இல்லை நீரிழிவு நோயும் வருகிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை விட்டு விடுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: