சாப்பிட்டதும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டல் அதை உடனடியாக குறைக்க இயற்கை வழி!

0
5766

சாப்பிட்டதும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டல் அதை உடனடியாக குறைக்க இயற்கை வழி.

ஆரம்பத்தில் கணையமானது அதிகளவு இன்சுலியை உருவாக்கி, க்ளுக்கோஸை செல்களுக்கு நகர்த்த முயற்சிக்கும். ஆனால் இதை சமாளிக்க முடியாமல், இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும். டைப்-2 சர்க்கரை நோய் உள்ள பலருக்கு, தங்களுக்கு இப்பிரச்சனை இருப்பதே தெரியாது. இதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட நேரிடும். எனவே ஒவ்வொருவரும் சர்க்கரை நோய்க்கான காரணிகள் எவையென்று தெரிந்து கொள் வேண்டியது அவசியம்.

இன்றைக்கு பலரையும் பயமுறுத்தும் ஒரு வியாதி என்றால் சர்க்கரை நோயைக் குறிப்பிடலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டால் போதும் கூடவே இன்னபிற வியாதிகள் எல்லாம் வரிசை கட்டி வந்து விடுகின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவை பார்த்தாலும் இதனை நாம் சாப்பிடலாமா வேண்டாமா? இதனைச் சாப்பிடுவதால் நம் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்து விடுமா என்ற சந்தேகம் வந்து பயந்து கொண்டேயிருப்பார்கள். அதற்காக எதையும் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெறும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக சத்தான காய்கறி,பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இங்கேயும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் வந்து விடுகிறது, பழங்கள் என்று சொன்னால் அவற்றில் இருக்கிற இனிப்புச்சத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால்??? அதோடு நட்ஸ் எல்லாம் சாப்பிடலமா என்ற சந்தேகமும் கூடவே இருக்கும்.

இவற்றில் சர்க்கரை நோயாளிகள் பாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்….

உணவிற்கு பிறகு :
சர்க்கரை நோயாளிகளுக்கு பிறரை விட மிக வேகமாக ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடிடும், உணவு சாப்பிட்டவுடன் இந்த மாற்றம் நிகழும். இதற்கு காரணம், நாம் சாப்பிடுகிற உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை தான் நிறைந்திருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவும் உடனடியாக அதிகரித்து விடுகிறது.

இந்நிலையில் உணவிற்கு பிறகு இரண்டு பாதாம் எடுத்துக் கொள்வதினால் உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு கூடுவதை தவிர்க்கலாம்.

பாதாம் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள்

கலோரி :
உணவு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கப் அளவுள்ள பாதாமை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு நிறைவான உணர்வைத் தரும் அதோடு உங்கள் உடலுக்குத் தேவையான கலோரியும் கிடைத்திடும்.

இதனால் கலோரி அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

இன்ஸுலின் :
இது சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமல்ல ப்ரீ டயாப்படீஸ் நிலையில் இருப்பவர்களுக்கும் பெரிதும் உதவிடுகிறது. பாதாம் சாப்பிடுபவர்களுக்கு இன்ஸுலின் சென்ஸிடிவிட்டி அதிகரித்திடும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மக்னீசியம் :
பாதாமில் அதிகப்படியாக இருக்ககூடிய சத்துக்களில் மக்னீசியமும் ஒன்று. நம் உடலில் போதுமான அளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதே போல நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு தானாகவே உடலில் மக்னீசியம் குறைந்திடும்.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள், சிறுநீர் வழியாக உடலில் இருக்கும் மக்னீசியம் சென்றிடும். இதனால் இன்னபிற உடல் உபாதைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவிடுகிறது.

இதயம் :
இது பலருக்கும் தெரிந்திருக்கும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு என்பார்கள். அல்லது அவர்களுக்கு இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்.

இவர்களுக்கு பாதாம் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பாதாமில் மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கிறது. இது இதயத்தில் ஏற்படுகிற பிரச்சனையை தவிர்க்கச் செய்திடும்.

உடல் எடை :
பாதாம் கலோரி அதிகமிருக்கிற ஒரு நட்ஸ். இதனை சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைவான உணர்வினைக் கொடுக்கும், அதொடு கூடுதலான உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் இதனால் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவிடும்.

உங்களது உடல் எடையில் கவனம் செலுத்துவதினால் தானாக சர்க்கரை நோயும் கட்டுப்படுத்தப்படும்.

கொலஸ்ட்ரால் :
மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்டுள்ள பாதாம் நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை கரைத்திடும். இதனை எல் டி எல் ஃபேட் என்பார்கள். இதயத்தில் ஏற்படக்கூடிய அடைப்பிற்கு பெரும்பாலும் இந்த வகை கொழுப்பே காரணம்.

சர்க்கரை நோயாளிகள் பாதாம் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

பக்கவாதம் :
சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் பாதிக்கவும் அதிக வாய்ப்புண்டு. ரத்த நாளங்கள் அடைப்பு ஏற்படுவதால் மூளைக்குச் செல்லக்கூடிய ரத்தம் சரியாக செல்லாமல் பக்கவாதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க பாதாம் பெரிதும் உதவிடுகிறது.குறிப்பாக டைப் 2 டயப்பட்டீஸ் பாதித்தவர்கள் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் வலி :
சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக டைப் 2 டயபட்டீஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு,உடல் வலி அடிக்கடி ஏற்படும். இவர்களுக்கு பாதாம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

தினமும் காலையில் இரண்டு பாதாம் சாப்பிட்டு வாருங்கள்.

டயட் :
சர்க்கரை நோயாளிகளுக்கு லோ கார்ப் டயட் தான் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும். காரணம், அவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கார்போஹைட்ரே அவர்களது சர்க்கரை அளவினை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே….

இவர்களுக்கு பாதாம் நல்லது. ஏனென்றால் பாதாமில் குறைந்த கலோரி இருக்கிறது அதோடு குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட்டும் கிடைத்திடும். இதனால் உங்களது ரத்தச் சர்க்கரை அளவு உயராது.

எவ்வளவு சாப்பிடலாம் :
ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் அளவு பாதாம் வரை சாப்பிடலாம். கிட்டத்தட்ட 30 பாதாம். இதைத் தாண்டி அதிகமாக எடுத்துக் கொள்ளமால் தவிர்க்க ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டிய பாதாம் மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுஙள்.

உங்களது அன்றாட உணவுப்பழக்கமும் இதில் கவனித்தில் கொள்ள வேண்டியது அவசியம்.அதனால் உங்களது மருத்துவரிடத்தில் ஒரு முறை கலந்தாலோசித்து பாதாம் தொடர்வது நல்லது, பாதாமை வழக்கத்தை விட அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் ஒவ்வாமை ஏற்படும். இதனால் அலர்ஜி, வயிற்றுவலி,வாந்தி போன்றவையும் ஏற்பட வாய்புண்டு.

எதிர்மறை :
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பாதாமில் அதிகப்படியான கலோரி இருக்கிறது. சர்க்கரை நோயைக்குறைக்க பாதாம் சாப்பிடுகிறேன் என்று ஒரு நாளைக்கு முப்பது பாதாம் சாப்பிடும் அதே நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்து வர, உடலில் கலோரி அதிகமாகி எதிர்மறையான பலன்களை கொடுக்கத்துவங்கிடும்.

இதனால் பாதாம் எடுத்துக் கொள்கிறவர்கள் தங்களது உணவில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகைகளில் உள்ள கருமையைப் போக்கி, வெண்ணிற தோற்றத்தை பெற இயற்கை வழிகள்.
Next articleகல்லீரலை சுத்தம் செய்து எவ்வித தொற்றுகளும் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!