சனி வக்ர பெயர்ச்சியால் 141 நாட்கள் 12 ராசிக்காரர்களில் யார் அதிஸ்டசாலிகள்! யார் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்!

0

சனி வக்ர பெயர்ச்சியால் 141 நாட்கள் 12 ராசிக்காரர்களில் யார் அதிஸ்டசாலிகள்! யார் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்! இதுவரை கும்ப ராசியில் பயணித்த‌ சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி அதிகாலை 04.14 மணிக்கு வக்ரமாக மாறுகிறார். பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி வரை அதாவது, 141 நாட்கள் இருப்பார். சனி வக்ரமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம் ராசிக்காரர்களுக்கு: மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமானதாக இருக்கும். பண வரவுடன் புகழும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு: ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். ஆகவே இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் அவசரத்தைக் கைவிட வேண்டும். எந்த ஒரு முடிவு அல்லது முதலீடு செய்வதாக இருந்தாலும், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பேச்சிலும், கோபத்திலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். அப்படியென்றால் தான் உங்களின் வேலையில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு: மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் சில புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் வீட்டில் அல்லது பணியிடத்தில் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், அதை சரியாக முடியுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாக சிந்திக்க வேண்டாம். சனி பகவான் உங்களின் கர்ம வினைகளுக்கு ஏற்பட பலன்களைத் தருவார்.

கடகம் ராசிக்காரர்களுக்கு: கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும். அதோடு பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். மேலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையை காட்டுங்கள். உத்தியோகத்தில் புதிய சவால்களை சந்திப்பீர்கள்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு: சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளுவை சமாளிக்க வேண்டியிருக்கும். வேலையின் போது விதிகளை பின்பற்றுங்கள். விதிகளை மீறினால் அவதிப்படுவீர்கள். மேலும் தவறான விஷயங்கள் மற்றும் தவறான நபர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு: கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் சனி பகவான் அருளால் சொத்துக்கள் பெருகும். லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு சாதகமான காலம் இது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு: துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலையில் தடைகள் ஏற்படலாம். பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்பதன் மூலம் எத்தகைய சிரமமும் குறையும்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு: விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்ப தகராறுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அடுத்த 141 நாட்கள் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு ராசிக்காரர்களுக்கு: தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் சனி பகவானின் அருளால் தொழிலில் நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். இதனால் உங்களின் நிதி நிலை இந்த காலகட்டத்தில் வலுவாக இருக்கும். மொத்தத்தில் இந்நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு: மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் கோபம் மற்றும் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் கோபம் உங்கள் வேலையைக் கெடுக்கும். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சில் நிதானம் இல்லாமல் இருப்பதால், காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு: கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் செலவுகளால் நிதி நிலைமை வலுவிழந்து போகும். அதுவும் சேமிப்பையும் சேர்த்து செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே பண விஷயங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

மீனம் ராசிக்காரர்களுக்கு: மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் வியாபாரத்தில் சவால்கள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக பணத்தையும் இழக்க நேரிடும். இக்காலகட்டத்தில் புதிய வேலைகள் எதையும் செய்ய வேண்டாம். கடன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் சிக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய சவால்களை சந்திக்க நேரிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 03.06.2022 Today Rasi Palan 03-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 04.06.2022 Today Rasi Palan 04-06-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!